டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் கலந்து கொள்கிறார் ஒலிம்பிக் சாம்பியன் கிப்சோகி

201610141958279077_olympic-champion-kipchoge-to-run-airtel-delhi-half-marathon_secvpf

கென்ய நாட்டை சேர்ந்த தடகள வீரர் எல்யூட் கிப்சோகி. இவர் ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் கிப்சோகி 2 மணி நேரம், 08 நிமிடம், 44 வினாடியில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் மாரத்தான் ஒட்டம் ஒன்றில் எல்யூட் கிப்சோகி கலந்து கொள்கின்றார். இந்த மாரத்தான் ஓட்ட பந்தயம் தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் வருகின்ற நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் வருவது குறித்து கிப்சோகி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top