முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன்: ரோசய்யா

201610141931006527_cm-will-return-to-home-within-few-days-rosaiah_secvpf

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது.

இதனிடையே, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய கட்சிகளின் தலைவர்களும் முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளாவின் முதல்-மந்திரி மற்றும் ஆளுநர் இருவரும் கூட சில தினங்களுக்கு முன்பு அப்பல்லோ வந்து நலன் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா இன்று மாலை 6 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலன் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோசைய்யா, “முதல்வர் சில தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று நம்புகிறேன். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன். இது என்னுடைய பிராத்தனை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்களுடையது.” என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top