குஜராத்தில் 16-ந்தேதி அரசு ஊழியர் தேர்வுக்காக 4 மணி நேரம் செல்போன் முடக்கம்

201610141142107108_mobile-internet-to-remain-shut-in-gujarat-for-clerk-exam-on_secvpf

குஜராத் மாநிலம் அரசு துறையில் குமாஸ்தா, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

7 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்த பணிக்காக விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் செல்போன், இணையதளம் போன்றவற்றின் மூலம் முறைகேடுகள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதால் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் 4 மணி நேரத்துக்கு செல்போன் சேவை மற்றும் இணையதள சேவை அனைத்தையும் முற்றிலும் நிறுத்தும்படி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி பகல் 10 மணியில் இருந்து 2 மணி வரை அங்கு செல்போன் சேவை, இணைய தள சேவை நிறுத்தப்படும். அரசு ஊழியர் தேர்வுக்காக இது போன்ற சேவைகளை முற்றிலும் நிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.

ஆத் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார். அவருடைய பேச்சை இணைய தளம் மற்றும் டி.வி. மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த தடையை மாநில அரசு மறைமுகமாக புகுத்து இருப்பதாக மாநில ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top