காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்

201610141210582145_maldives-to-leave-the-commonwealth_secvpf

இந்து பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு நாடு. இது பல அழகிய குட்டி தீவுகளால் ஆனது. இது இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றது. எனவே 53 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகுவதாக திடீரென அந்நாடு அறிவித்துள்ளது. அதற்கு அரசியல் நிகழ்வுகளே காரணம் என கருதப்படுகிறது.

அதிபராக இருந்த முகமது நஷீத் கடந்த 2012-ம் ஆண்டு பதவி விலகினார். அவர் ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக கூறி 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவுக்காக சிகிச்சை பெற லண்டன் சென்று அங்கேயே தங்கிவிட்டார். இதற்கிடையே மாலத்தீவில் அவரது ஆதரவாளர்கள் மீது ஆட்சியாளர்களால் பல்வேறு வழக்குகள் தொடரப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இதை நிறுத்தும்படி காமன்வெல்த் செகரட்டரி ஜெனரல் பட்ரிசியா ஸ்காட்லாந்து தெரிவித்து இருந்தார். இல்லாவிட்டால் காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு சஸ்பெண்டு செய்யப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகுவதாக நேற்று மாலத்தீவு அறிவித்தது. இந்த முடிவு மிகவும் கஷ்டமானது. ஆனால் தவிர்க்க முடியாமல் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது என வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top