ரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்

201610121838328808_new-food-delivery-on-trains-2-minutes-to-locate-customer_secvpf

ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம் என்றாலும் நீண்ட தூர பிரயாணிகளுக்கு உணவு ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஆறிப்போன ரெயில்வே கேண்டீன் உணவுகளை பயணிகளும் விரும்புவதில்லை. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட இந்திய ரெயில்வே இ-கேட்டரிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் படி நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு விருப்பமான பாஸ்ட்புட் வகை உணவுகளை மொபைல் ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்து விரைவாக பெற்றுக்கொள்ளலாம்.

தங்கள் இருக்கை எண்ணைக் குறிப்பிட்டு பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்தால், ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்கும்போது 2 நிமிடங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே உணவு வந்துவிடும் என்பது சிறப்பு.

மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களுக்கு உணவு கொண்டுவர தனியார் உணவகங்களுடன் ரெயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி சூடான உணவுகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்தனர்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக தனியார் உணவு விடுதிகள் ரெயில் நிலையங்களில் உணவுகளை சமைத்து சூடாக பயணிகளுக்கு விநியோகம் செய்ய ஸ்பேஸ் கிச்சன் என்ற திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top