சூழ்நிலையை இந்திய அணி சிறப்பாக கையாண்டது: வில்லியம்சன்

201610120845079486_indian-team-handled-the-situation-better-williamson_secvpf

இந்தூரில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘அஸ்வினை பார்த்து நாங்கள் மனரீதியாக பயப்படவில்லை. அஸ்வின் தொடர்நாயகன் விருதுக்கு தகுதியானவர். சுழற்பந்துக்கு சாதகமாக இங்குள்ள சூழ்நிலையை இந்திய அணி எங்களை விட நன்றாக பயன்படுத்தி கொண்டது.

பேட்டிங்கிலும் இந்திய அணி பொறுமையை கடைப்பிடித்தது. இந்திய அணி சிறப்பானதாகும். அதனை அவர்கள் இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டி தொடரில் எங்களால் இந்திய அணிக்கு சில நேரங்களில் மட்டுமே நெருக்கடி கொடுக்க முடிந்தது. தொடர்ச்சியாக நெருக்கடி அளிக்க முடியவில்லை. தொடரை முழுமையாக இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் அணியாக ஒட்டுமொத்த திறமையை சரியாக வெளிப்படுத்தவில்லை. இளம் இந்திய அணியிடம் இருந்து நாங்கள் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top