இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனே-கவுகாத்தி இன்று பலப்பரீட்சை

201610121322558547_isl-football-pune-vs-guwahati-today-clash_secvpf

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் 11-வது ‘லீக்’ ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இதில் புனே-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. புனே அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் மும்பையிடம் தோற்றது. 2-வது போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.

கவுகாத்தி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது. கேரளாவை 1-0 என்ற கணக்கிலும், கோவாவை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. மும்பையிடம் 0-1 என்ற கணக்கில் தோற்றது. கவுகாத்தி அணி 3-வது வெற்றி பெறும் ஆர்வத்துடன் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top