ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா

201610120810534814_isl-football-mumbai-kolkata-match-draw_secvpf

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் மும்பை அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் டிபெட்ரிகோ (அர்ஜென்டினா) இந்த கோலை அடித்தார். பின் பாதியில் கொல்கத்தா அணி பதில் கோல் திருப்பியது.

82-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஜாவியர் லாரா கிரான்டே (ஸ்பெயின்) இந்த கோலை திணித்தார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று இரவு 7 மணிக்கு புனேயில் நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top