கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

201610131614570308_minister-sellur-raju-conducted-review-meeting-with-higher_secvpf

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் இன்று (13.10.2016) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் பெற்ற, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள், விதி எண்.110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, நடப்பாண்டில் வழங்கப்பட்ட பயிர்க்கடன், கொப்பரை கொள்முதல் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல், பொது சேவை மையங்களின் செயல்பாடுகளை பட்டியலிட்டார். மேலும், கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்க்கடன்கள் வழங்கவும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த மாதம் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் புகார்கள் ஏதுமின்றி பணியாற்றிட வேண்டும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர், தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூட்டுறவு, கூடுதல் பதிவாளர்கள் த.ஆனந்த், முனைவர் க.இராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், எம்.மோகன், மு.செந்தமிழ்ச்செல்வன், ஆர்.பிருந்தா, ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர் பா.பாலமுருகன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top