போபால் பிளாஸ்டிக் சேர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

201610131742123536_massive-fire-at-plastic-chair-factory-in-bhopal_secvpf

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள ஒரு பிளாஸ்டிக் சேர் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது.

இதையடுத்து தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையில் இருந்து எழுந்த கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. தொழிற்சாலை வளாகத்தினுள் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள் கருகி சேதமடைந்திருக்கலாம் என தெரிகிறது. தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியை தொடங்கினால்தான் உயிர்ச்சேதம் குறித்த தகவல் வெளியாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top