ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி

201610130807488095_shanghai-masters-tennis-nadal-defeat-in-2nd-round_secvpf

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்டீவ் ஜான்சனை (அமெரிக்கா) எளிதில் வென்றார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 3-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 31-வது இடத்தில் இருக்கும் விக்டோர் டிரிக்கிடம் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் கெய்ல் எட்முர்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

இதற்கிடையில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் உலக டூர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ‘டாப்-8’ வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு தகுதி பெற்ற 5-வது வீரர் நிஷிகோரி ஆவார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top