ராவணனால் எரிக்கப்பட்ட ராமன் : தடையை மீறி நடந்த ராவண லீலா

7adcd653-814a-4238-86b2-10a016c80cb2

தமிழ் அரசனான இராவணனை அரக்கராக சித்தரித்து, வருடாவருடம் ராம லீலா என்ற திருவிழாவை நடத்தி வருவதற்கு பதிலடி கொடுப்பதாக, இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலை எதிர்த்து இராவண லீலாவை இன்று  நடத்துவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. சம்ஸ்கிருத கல்லூரி அருகில் நடைபெறுவதாக இருந்த இராவண லீலா ராயப்பேட்டையில் உள்ள வி.எம். தெருவுக்கு இன்று மாற்றப்பட்டது.

அதன் படி தடையை மீறி இன்று இராமர் பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் “தசரா பண்டிகை என்ற பெயரிலே திராவிடர்களை இழிவுபடுத்தும் விதமாக ராவணனின் உருவ பொம்மையை டெல்லியிலே கொழுத்துகிறார்கள். நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பிலே பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், குடியரசு தலைவருக்கும் எங்களது அமைப்பின் சார்பிலே கடிதம் எழுதினோம். திராவிடர்களை இழிவு படுத்தும் இந்த நிகழ்வை நீங்கள் இந்த ஆண்டு நிறுத்த வேண்டும். நிறுத்தாவிட்டால் அதற்கு எதிர்வினையாக நாங்கள் ராமனை கொழுத்துவோம் கூறினோம். அதன் படி நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.

நிகழ்வு பற்றிய காணொளி இணைப்பு


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top