உலகக்கோப்பை கபடி: வங்காளதேசத்தை பந்தாடியது இந்தியா

201610112225419164_india-beat-bangladesh-5720-at-kabaddi-world-cup-2016_secvpf

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கபடி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

மூன்றாவது உலகக்கோப்பை கபடி போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 2 முறை சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா, வங்காளதேசம் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 32-34 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது ஆட்டத்தில் 54-20 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்நிலையில், இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர் கொண்டது. வங்காளதேசம் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியதால் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப ஆட்டத்தின் துவக்கத்தில் வங்காளதேச வீரர்கள், இந்திய வீரர்களை ரெய்டில் மிரட்டினர். ஆனால், அது நீடிக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. முதல் பாதியில் 14-5 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். அடுத்தடுத்து ஆல் அவுட் ஆக்கி போனஸ் புள்ளிகளை அள்ளியதால், வலுவான முன்னிலை பெற்றனர்.

இறுதியில் 57-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 11 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top