நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

201610101625256860_3rd-test-day-3-new-zealand-all-out-for-299-as-ashwin-claims_secvpf

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. விராட் கோலி 211 ரன்களும், ரகானே 188 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. குப்தில் 17(30), லாந்தம் 6(24) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து, மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. குப்தில் மற்றூம் லாந்தம் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்ந்தது. லாந்தம் 53 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் கேட்சாகி அவுட் ஆனார். இதனையடுத்து அஸ்வின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்தது. வில்லியம்சன்(8),  டெய்லர்(0), ரோஞ்சி(0) ரன்களில் ஆட்டமிழந்தனர். குப்திலும் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வினிடம் ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து வாட்லிங்(23), சாண்ட்னெர்(22) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த நீஷம் 71 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 90.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 299 ரன்கள் எடுத்தது. அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனால் நியூசிலாந்து அணி இந்தியாவை விட 258 ரன்கள் பின் தங்கி உள்ளது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top