பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு

201610101603233165_nobel-prize-in-economics-2016-awarded-to-oliver-hart-and_secvpf

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆலிவர் ஹர்ட் குறிப்பாக அரசு சேவைகளை தனியார் மயமாக்கல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தார். மேலும் குறைந்த செலவில் உயர்தரமான சேவைகளை அரசுகள் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top