முதல்வர் ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க கேரள முதல்வர், ஆளுநர் சென்னை வருகை

201610101455588810_kerala-cm-and-governer-came-to-chennai-apollo-hospital_secvpf

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வெள்ளிக் கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு திடீரென வருகை புரிந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இந்த நிகழ்வு தமிழக அரசியல் சூழலில் புயலை கிளப்பி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் ஆகியோர் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகவே சென்னை வந்தேன். முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் நல்ல தகவல்களை கூறினார்கள் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய கேரள் மக்கள் பிராத்தனை செய்வார்கள்” என்றார்.

அப்பல்லோ மருத்துவமனை வந்த கேரள ஆளுநர் சதாசிவம் முதல்வர் குறித்து மருத்துவர்களிடம் நலம் விசாரித்து பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top