போராளியான ஜெயலலிதா உடல்நலம் தேறி முதல் அமைச்சராக மக்கள் சேவையை தொடருவார்: வெங்கய்யா நாயுடு

201610101525103843_jaya-a-fighter-will-continue-to-serve-people-of-tn-venkaiah_secvpf

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடு இன்று காலை சந்தித்தார். கவர்னருடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழக கவர்னரை சந்தித்தபின் வெங்கய்யா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னருடனான இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலைப்பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை காத்திருப்போம்.

பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பதைப் பற்றி தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

பொறுப்பு முதல் அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று வெளியில் இருப்பவர்கள் எப்படி சொல்ல முடியும்?. பிரதமர் வெளிநாடுகளுக்கு போகும்போது மற்ற மந்திரிகள் தங்களது பணிகளை செய்வதுபோல் முதல் அமைச்சருக்கு அடுத்தபடியாக மற்ற அமைச்சர்கள் இருக்கிறார்கள். தங்களது பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு முதல் அமைச்சர் இருக்கிறார். அவரால் தேர்வு செய்யப்பட்ட மற்ற அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். செயல்படவும் வேண்டும்.

(ஒருவேளை) வேறுசில பிரச்சனைகள் எழும்போது சூழ்நிலைக்கேற்ப மாநில கவர்னர் பார்த்து கொள்வார். அப்படி இல்லாத நிலையில், இதைப்போன்ற தேவையற்ற யூகங்கள் நல்லது அல்ல.

தமிழக முதல் அமைச்சர் மனஉறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர். எப்போதுமே அவர் ஒரு போராளியாக இருந்து வந்துள்ளார். (உடல்நலக்குறைவை எதிர்த்து) போராடி, இயல்புநிலைக்கு திரும்பி அதமிழக மக்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top