நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து கேப்டன் கோலி சாதனை

201610091420264960_virat-kohli-scores-a-double-century-against-new-zealand_secvpf

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து விளையாடினர்.

விராட் கோலி 273 பந்துகளிலும், ரகானே 300 பந்துகளிலும் 150 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி, 347 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதில்19 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணி  143.5 ஓவர்களில் 450 ரன்களை எட்டியுள்ளது. கோலி, ரகானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 648 பந்துகளில் 350 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top