மாயாவதி பொதுகூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

201610092033197330_up-cm-akhilesh-announces-compensation-of-rs-2-lakh-each-to_secvpf

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி பேசிய பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களில் இரு பெண்கள் தள்ளுமுள்ளில் சிக்கி பலியாகினர்.

லக்னோ நகரில் உள்ள கன்சிராம் திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசிவிட்டு புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னர் ஆட்சிசெய்த பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்த கன்சிராமின் பத்தாவது நினைவுதினத்தை முன்னிட்டு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாயாவதி கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top