ஐ.பி.எல். போட்டி: பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்!

mumbai vs banglore ipl7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்–ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேப்டன் கோலி, யுவராஜ்சிங், கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், அல்பி மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் இருப்பதால் பெங்களூர் அணி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அந்த அணிக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான பேட்டிங்கால் தோற்ற மும்பை அணி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.போல்லார்ட், மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித்சர்மா, மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் மும்பை அணியில் உள்ளனர்.

இரவு 8 மணிக்கு நடைபெறும் 2–வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி தொடர்ந்து 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.காலிஸ், சுனீல் நரீன், மனிஷ் பாண்டே போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

கேப்டன் காம்பீரின் ஆட்டம் மோசமாக இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. யூசுப்பதான் தந்தையானதால் நாடு திரும்பியுள்ளார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

டெல்லி அணியின் கேப்டன் பீட்டர்சன் காயம் காரணமாக முதல் போட்டியில் ஆடவில்லை. இதனால் அந்த அணி பெங்களூரிடம் சரண்டர் ஆனது. இன்று அவர் ஆடுவாரா என்பது உறுதியில்லை.தினேஷ் கார்த்திக் தொடக்க ஆட்டத்தில் முத்திரை பதிக்கவில்லை. டுமினி, ரோஸ் டெய்லர் போன்ற சிறந்த வீரர்களை கொண்ட அந்த அணி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top