மோகன்லால் மகனை இயக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?

201610081928233928_mohanlal-son-debut-in-soundarya-rajinikanth-film_secvpf

நடிகர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவது புதிதல்ல, அந்த வரிசையில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலும் தற்போது இணைந்திருக்கிறார். கடந்த மாதம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தன் மகன் பிரணவ் நடிக்கப் போவதை அறிவித்தார்.

இந்நிலையில் ‘கோச்சடையான்’ படத்தைத் தொடர்ந்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்தில் பிரணவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் எழுதியிருக்கும் இக்கதையில் அறிமுக நடிகர் ஒருவரை நடிக்க வைத்தால், நன்றாக இருக்கும் என்று சவுந்தர்யா கருதுகிறாராம்.

இதனால் பிரணவ்வின் தமிழ் அறிமுகம் சவுந்தர்யா மூலமாக நிகழலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top