சிம்புவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்

201610091559200421_good-news-for-simbu-fans_secvpf

சிம்பு தனது பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கை தொடங்கி, பின்னர் சில பிரச்சினைகளால் டுவிட்டர் கணக்கை தனது ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதன்பின், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரது ரசிகர்கள் மூலமாக டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு வந்தது.

டுவிட்டர் கணக்கில் தனது பெயரில் கணக்கை தொடங்கிய சிம்பு, பேஸ்புக் வலைத்தளத்தில் இதுவரை தனது பெயரில் எந்த அக்கவுண்டையும் நிறுவவில்லை. இருப்பினும், சிம்பு பெயரில் நிறைய பேஸ்புக் பக்கங்கள் ரசிகர்கள் உருவாக்கப்பட்டு, சிம்பு சம்பந்தப்பட்ட செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், சிம்பு தனக்கென்று அதிகாரப்பூர்வ பேஸ்புக் இணையதள பக்கத்தை தற்போது நிறுவியுள்ளார். அவர் தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போஸ்டரை போட்டுள்ளார். மேலும், இன்று மாலை 5 மணியளவில் இந்த தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

சிம்புவை பின்தொடர விரும்புபவர்கள் http://fb.com/iamSTR  என்ற பேஸ்புக் இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கவும். சிம்பு பேஸ்புக்கில் இணைந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top