மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு வருகை

201610091935304446_union-minister-venkaiah-naidu-came-chennai-apollo_secvpf

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன் தினம் அப்பல்லோ மருத்துவமனை வருகை புரிந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக அப்பல்லோ மருத்துவமனை வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இன்று மாலை 6 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்.

உடல் நலம் பற்றி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். முதல்வரின் உடல்நிலை குறித்து கவனத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம்குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வருவார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி ஒருவர் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top