எத்தியோப்பியாவில் ஆறு மாத அவசர கால நிலை அறிவிப்பு

_91740281_ff7841a5-e806-411c-bd6f-9285c245eef8

எத்தியோப்பியாவில் அந்நாட்டு அரசாங்கம் 6 மாத காலங்களுக்கு அவசர கால நிலையை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் உள்ள இரு பெரும் இனக் குழுக்களான ஒரோமோஸ் மற்றும் அம்ஹாராஸ் உறுப்பினர்கள் பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று, ஒரோமோ கலச்சார நிகழ்வின் போது குறைந்தது 55 பேர் உயிரிழந்தார்கள்.

அதிலிருந்து, போலிசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த போராட்டம் தொடங்கியதிலிருந்து நூற்றக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top