தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

201610091019336953_opening-of-the-krishna-canal-water-to-tamil-nadu-chandrababu_secvpf

சென்னை நகர குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன.

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணா கால்வாயில் திறக்க ஒப்பந்தம் உள்ளது.

இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து பின்னர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படும். இந்த ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் பற்றாக்குறையை போக்க கிருஷ்ணா கால்வாயிலில் தண்ணீர் திறக்க தமிழக பொது பணித்துறையினர் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக அரசின் உயர் அதிகாரி தொலை பேசியில் தொடர்பு கொண்டு சென்னை நகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா கால்வாயிலில் 3 டி.எம்.சி திறக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதையடுத்து தமிழ்நாட்டுக்கு 2 டி.எம்.சி. திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை விஜயவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ் நாட்டுக்கு தற்போது 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இங்குள்ள சூழ்நிலையை ஆராய்ந்து பின்னர் மேலும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top