போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு

201610081332054525_porkalathil-oru-poo-release-banned-by-high-court_secvpf

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி மக்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறையைச் சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, கே.கணேசன் என்பவர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார்.

இந்த படத்தை பொதுமக்களுக்கு திரையிட்டு காட்ட அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவையும் சென்சார் போர்டு மேல் முறையீட்டு குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த திரைப் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, போர் களத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாய் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘இந்த படத்தில் கொடூர காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு உத்தர விட்டுள்ளது.

அதே நேரம், இசைப்பிரியா பற்றி இந்த படத்தில் காட்சிகள் வருவதால், இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று அவரது தாயாரும், சகோதரியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த படத்தை பொதுமக்கள் மத்தியில் வெளியிட அனுமதிக்க முடியாது. இந்த படத்தை வெளியிட தடை விதிக் கிறேன்’ என்று உத்தர விட் டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய  அப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பு வக்கீல்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top