ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி மும்பை அணி 2-வது வெற்றி

201610080816174266_isl-football-mumbai-indians-2nd-win_secvpf

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.யும் (கவுகாத்தி) சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் 55-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் பிரனாய் ஹால்டெரை, கோல் பகுதியில் வைத்து எதிரணி வீரர் காலை இடறி விட்டதால், மும்பை அணி ‘பெனால்டி’ அதிர்ஷ்டத்தை பெற்றது. பெனால்டி வாய்ப்பை மும்பையின் நம்பிக்கை வீரர் டியாகோ பார்லன் (உருகுவே) எளிதில் கோலாக்கினார். அதன் பிறகு கோல் எதுவும் விழவில்லை.

கவுகாத்தி அணி இலக்கை நோக்கி 6 ஷாட்டுகளை அடித்த போதிலும் ஒன்றை கூட கோலாக மாற்ற முடியவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. மும்பை அணி ஏற்கனவே 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த கவுகாத்தி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இன்று இரவு 7 மணிக்கு படோர்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி.கோவா-புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top