3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் – காம்பீருக்கு வாய்ப்பு

201610081113098824_india-vs-new-zealand-3rd-test-india-won-the-toss_secvpf

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் தொடங்கியது.

காயம் காரணமாக விலகிய இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக கவுதம் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுக்கு பிறகு அவர் களம் இறங்கி உள்ளார்.

காயத்தால் விலகிய புவனேஸ்குமாருக்கு பதில் உமேஷ்யாதவ் சேர்க்கப்பட்டார்.

உடல்நல குறைவால் 2-வது டெஸ்டில் விளையாட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அணிக்கு திரும்பினார் . நிகோஸ் நீக்கப்பட்டார். வாக்னருக்கு பதிலாக ஜேம்ஸ் நீசம் இடம் பெற்றார்.

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இத்தொடரில் 3 போட்டியிலும் வீராட்கோலியே டாஸ் ஜெயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், கவுதம் காம்பீர், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, சகா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி, உமேஷ்யாதவ்.

நியூசிலாந்து: வில்லியம் சன் (கேப்டன்) டாம்பதம், மார்ட்டின் குப்தில், ரோஸ் டெஸ்சர், ரோஞ்சி, நீசம், சான்னெர், வாட்சிங், ஜிதன் பட்டேல், மெட் ஹென்சி, போல்ட்.

தொடக்க வீரர்களாக முரளிவிஜய், கவுதம் காம்பீர் களம் இறங்கினர். இருவரும் நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top