சென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

201610071549484890_chennai-metro-begins-trial-runs-between-thirumangalam-and_secvpf

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பேடு–ஆலந்தூர் மற்றும் விமானநிலையம்–சின்னமலை இடையே சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருமங்கலம்–நேரு பூங்கா இடையே 9 கி.மீ. தூரத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்ட்ரல் முதல் திருமங்கலம் வரையிலான சுரங்க ரெயில் பாதையில் 9 ரெயில் நிலையங்கள உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top