தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா

201610051829147643_tamil-cinema-grows-me-actress-tamanna_secvpf

‘கேடி’ படத்தில் இலியானாவுடன் சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு ‘கல்லூரி’, ‘வியாபாரி’ படங்களில் நடித்தார்.  குறுகிய காலத்தில் முன்னணி ஆன இவர் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறார். பிரபுதேவாவுடன் தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் திரைக்கு வருகிறது. இதுபற்றி கூறிய தமன்னா…

“மும்பை பெண்ணான என்னை ஒரு நடிகையாக அங்கீகரித்தது தமிழ் சினிமாதான். இதற்குப் பிறகுதான் எனக்கு மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து என் தாய் மொழியான இந்திக்கு போய் நடித்த போது எனக்கு வெற்றி கிடைக்கவில்லை.

மீண்டும் தமிழில் நடித்த ‘வீரம்’ படம் மூலம் எனக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. ‘பாகுபலி’யிலும் பெயர் வாங்கினேன். இப்போது தேவி படமும் எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல். இந்த வாய்ப்பையும் தமிழ் இயக்குனர் விஜய்தான் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாதான் மேலும் மேலும் என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top