நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி

201610041050524246_virat-kohli-says-captured-the-number-one-test-ranking-will_secvpf

நியூசிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.

கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டி தொடருக்கு முன்பு இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் 111 புள்ளியுடன் முதலிடம் வகித்தது.

தற்போது இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா 4-வது முறையாக முதலிடத்தை பிடித்து உள்ளது.

தொடரை கைப்பற்றியது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிப்பது என்பது நீங்கள் களத்தில் எப்படி செயல்பட்டீர்கள் என்பதற்கான ஊக்கம்தான். நாங்கள் அனைத்து போட்டியிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்களது ஆக்ரோ‌ஷத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்.

நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதுதான் எங்களது பணி. அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதைவிட அணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இதுபற்றி யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. இதனால் எந்த சூழ்நிலையிலும் எங்களால் விளையாட முடியும். ஆடுகளத்தை பற்றி கவலைப்படாமல் எங்கும் எங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top