அக்.7 முதல் 18-ந்தேதி வரை நாள்தோறும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

201610041639179506_sc-asks-karnataka-to-release-2000-cusecs-of-water-daily-from_secvpf

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அக்டோபர் 7-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தற்போது அமைக்கும் சாத்தியமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தயாராக உள்ளோம். காவிரி மேற்பார்வை குழு கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆய்வு செய்ய வேண்டும். எவ்வளவு நீர் திறப்பது குறித்து சிறிது நேரத்தில் விளக்கமளிக்கப்படும் எனக் கூறினர்.

அதன்பிறகு தமிழகத்திற்கு வருகிற 7-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நாள்தோறும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்ட வேண்டும். இந்த குழு கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து 17-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top