கோவையில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம் முன்பு மாநில அமைப்பாளர் ஆறுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்காததால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் நிர்வாகிகள் அகில் குமரவேல், வினோத், ரஞ்சித் பிரபு, தமிழரசன், ஜீவா மற்றும் மகளிரணி பாரதி, லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் அவர்கள் திடீரென கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார், தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் 10 பேரை கைது செய்தனர்.

அப்போது நிர்வாகி ஒருவர் திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றார். அங்கு நின்ற போலீசார் உடனடியாக உருவ பொம்மையை பிடுங்கினர்.

அப்போது அந்த நிர்வாகிக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top