இந்திய பொருளாதார உச்சி மாநாடு பேரவையைத் திறந்து வைக்க ரணில் விக்ரமசிங்கே தில்லி வருகை

மூன்று நாள்  பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தில்லி வந்துள்ளார்.

தில்லி வந்துள்ள விக்ரமசிங்கே உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவர் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற உரி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் சார்க் மாநாடு உள்ளிட்ட விவகாரகங்களை விரிவாகப் பேச உள்ளதாகத் தகவல் வட்டாரம் கூறியுள்ளது.

புதன்கிழமையான நாளை அவர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தர பிரதான் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். அன்று மாலை குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியை சந்திக்கின்றார்.

மூன்றாவது நாளாக வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து இந்திய பொருளாதார உச்சி மாநாடு பேரவையைத் திறந்து வைக்க உள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top