பஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது

201610040850133213_ten-coaches-of-jhelum-express-derail-in-punjab_secvpf

ஜம்முவில் இருந்து புனே நகரை நோக்கிச் சென்ற ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது.

லூதியானா அருகில் உள்ள பில்லாவ்ர் – லதோவால் நிலையங்களுக்கு நடுவே இன்று அதிகாலை 3.05 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் பத்து பெட்டிகள் தடம்புரண்டதாகவும், இந்த விபத்தில் இரு பயணிகள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான தகவல் வெளியானதும், மீட்புக் குழுவினரும், ரெயில்வே உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top