முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

201610031936089406_cm-jayalalitha-health-improvement-apollo-hospital-report_secvpf

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார்.  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், “ முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றுக்கான சிகிச்சையும் உரிய மருந்துகளும்  வழங்கப்பட்டு வருகின்றன. சிகிச்சையை தொடர்ந்து  முதல்வர் குணம் அடைந்து வருகிறார்.

முதல் அமைச்சருக்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து முதல் அமைச்சர் சிகிச்சை பெறுவார்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top