ரஷ்யா செஸ்: 5-வது சுற்றில் ஆனந்த் வெற்றி

201610031645576659_viswanathan-anand-defeated-in-fifth-round-of-russia-chess_secvpf

10-வது டால் நினைவு சர்வதேச செஸ் போட்டி மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்றில் இந்திய கிராண்ட்சிலாம் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இஸ்ரேலை சேர்ந்த போரிஸ் ஜெல்பாண்டை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து இந்த தொடரில் ஆனந்த் 3 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

5 சுற்றுகளின் முடிவில் ஹாலந்து வீரர் அனீஷ் கிரி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரஷ்ய வீரர் நெபோம் நியாச்சி 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சீனாவின் லீ சாவோ ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

அரோனியன், கிராம்னிக், மமேத்யாரோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பகிர்ந்துள்ளனர். ரஷ்யாவின் பீட்டர் ஸ்வைல்டர் 2 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், தோமஷேவ்ஸ்கி 1.5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். 5 சுற்றுகளில் விளையாடி அரை புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ஜெல்பாண்ட் கடைசி இடத்தில் இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top