காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை 1-ந் தேதி மாலை 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட உடன் அதன் உறுப்பினர்கள் உண்மை நிலவரத்தை கண்டறிந்து கோர்ட்டுக்கு 6-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்கும் தமிழக பிரதிநிதியாக, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் ஆர்.சுப்பிரமணியனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது

.

புதுவை மாநில உறுப்பினராக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை புதுவை அரசும்  நேற்று மதியம் வெளியிட்டது.

 

ஆனால் கர்நாடகம் எந்த பிரதிநிதியையும் நியமிக்கவில்லை.

மாறாக, இன்று காலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்  காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என மனு போட்டு வாதம்செய்து இருக்கிறது. ஒரு மத்திய அரசு மாநில சார்பு இன்றி நீதியின்பால்  நிலைப்பட்டு செயல்படுவதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் செயல்பாடு. ஆனால் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு  கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக நடந்து கொள்கிறது. கர்நாடகா அரசுக்கு சாதகமாகவும் தனக்கு அரசியல் ரீதியாக லாபம் அடையவும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்திலே சொல்லி விட்டது.தமிழர்களுக்கு எதிரான இந்த நிலைப்பாடு பிஜேபியை தமிழகத்தை விட்டே விரட்டி விடும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top