மத்திய மந்திரியுடன் ஐஸ்வர்யா தனுஷ் திடீர் சந்திப்பு

201610021502023465_aishwarya-dhanush-meet-to-central-minister-vengaiah-naidu_secvpf

இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தமிழில் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில், தற்போது ‘சினிமா வீரன்’ என்ற பெயரில் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கவிருக்கிறார்.

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் காட்சிகளுக்கு ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்கவுள்ளார். விரைவில் இந்த டாக்குமெண்டரி பிலிம் உருவாகவிருக்கிறது. இந்நிலையில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்தார்.

அப்போது, அவரிடம் தேசிய விருது பட்டியலில் ஸ்டண்ட் கலைஞர்களையும் இணைக்க வேண்டி மனு ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டண்ட் கலைஞர்களின் வேதனையை படமாக ஆக்குவதானாலே என்னவோ, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. இருப்பினும், இது வரவேற்கவேண்டிய ஒன்றுதான் என்று சினிமா வல்லுநர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top