அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்?

201610021213299453_arun-vijay-missing-family-member_secvpf

அருண் விஜய்யை சுற்றி தற்போது சோகமான சம்பவங்களே நடந்தேறி வருகிறது. சமீபத்தில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே தற்போது மேலும் ஒரு சோகம் அவரை பிடித்துக் கொண்டது.

இந்த முறை அவரது வீட்டில் உள்ள முக்கியமான ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் வேறு யாருமல்ல? இவர் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிதான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இவர் செல்லமாக வளர்த்து வந்த Lhasa Apso வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

அந்த நாய்க்குட்டியை யாராவது கண்டுபிடித்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த நாய்க்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அருண்விஜய்யின் வீடு ஈக்காட்டுதாங்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண்விஜய் நாய்க்குட்டி தொலைந்துபோன சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நடிப்பில் தற்போது ‘குற்றம் 23’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top