மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் சூர்யா

201610021611069991_suriya-again-joint-with-venkat-prabhu_secvpf

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை 600 0028’  படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணையப்போவதாக கூறப்படுகிற செய்தி என்னவென்றால், ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் இப்படத்தின் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார். இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற அக்டோபர் 7-ந் தேதி மலேசியாவில் இந்த விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், படத்தில் நடித்துள்ள அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், வைபவ், மஹத் ஆகியோரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top