ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

201610021138160727_japan-honor-to-sivakarthikeyan-after-rajini_secvpf

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘மெட்ராஸ் மூவிஸ்’ எனும்  நிறுவனம் பெற்றுள்ளது. ரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள்.

ஆனால் முதன் முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் ‘ரெமோ’ படம் வெளியாகிறது. ரஜினி படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படமே இந்த ஏரியாவில் வெளியிடப்படுவதால், ரஜினிக்கு பிறகு ஜப்பான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கௌரவம் வழங்கியதாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top