ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கொல்கத்தா இன்று மோதல்

 

201610020825405383_isl-2016-chennai-kolkata-clash-today_secvpfஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தாவை சந்திக்கிறது. சொந்த மண்ணில் போட்டியை வெற்றியுடன் தொடங்கவும், கடந்த ஆண்டு அரை இறுதியில் சென்னையின் எப்.சி. அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் அட்லெடிகோ டீ கொல்கத்தா அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் சாம்பியன் அணியான சென்னை அணி முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும்.

எனவே இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் கொல்கத்தாவும், ஒன்றில் சென்னையும் வெற்றி கண்டுள்ளன. இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1, 2 மற்றும் விஜய் சூப்பர் டெலிவிஷன் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top