தென் கொரியாவில் சீன மீனவர்கள் மீது கடலோர காவல் படை குண்டு வீச்சு; 3 சீன மீனவர்கள் பலியால் பதற்றம்

தென் கொரியாவில் சீன மீனவர்கள் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான பொருளாதார உறவு வளர்ந்து வருகிற நிலையில், பொதுவான உறவில் உராய்வை ஏற்படுத்தி வருகிறது.

சட்ட விரோத மீன் பிடித்தல் விவகாரத்தால் சீன மீனவர்களுக்கும், தென்கொரிய கடலோர காவல் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹோங்கோ தீவுக்கு 70 கி.மீ., தென் மேற்கில் கடலில் சீன மீனவர்கள் படகில் சென்று மீன் பிடித்தனர். அவர்களை திரும்ப செல்லுமாறு தென் கொரிய கடலோர காவல் படையினர் எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர்களை நோக்கி தென்கொரிய கடலோர காவல் படையினர் கையெறி குண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் வெடித்ததில் படகு தீப்பிடித்தது. இதில் உருவான புகை மண்டலத்தால், மூச்சு திணறி 3 மீனவர்கள் பலியாகினர். 14 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top