ஆதார் அட்டை எடுக்க மறைமுக நிர்பந்தம்; ஆதார் பணிகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஆதார் அட்டை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு திடீர் திட்டம் கொண்டுவந்தது.இந்த ஆதார் அட்டை எடுக்க அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு மக்களின் அடையாளங்கள் ‘கைரேகை’ ‘கண்ரேகை’ என அணைத்து அடையாளங்களும் அமெரிக்க நிறுவனம் எடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கும். நமது மக்களின் அடையாளங்கள் தேவை இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்வது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேள்வி கேட்டதும்,ஆதார் அட்டை கண்டிப்பு இல்லை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று மனு தாக்கல் செய்து திடீர் பல்டி அடித்தது.ஆனால் மத்திய அரசு கொடுக்கும் மானியம் மற்றும் உதவித்தொகை திட்டங்களில் ஆதார் அட்டை அவசியம் என கண்டிப்பு காட்டியது மீண்டும் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த சூழலில் மத்திய அரசு மேற்கொண்டுவந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இ–சேவை மையங்களில் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.என அறிக்கை விட்டிருக்கிறது.

bavel

பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் அட்டை கண்டிப்பாக தேவை என மத்திய அரசு நிர்பந்தம் கொடுக்கிறது. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை ஈடுபட்டு இருந்த மத்திய அரசு, இந்த பணியை தற்போது மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது. மாநில அரசின் இ–சேவை மையங்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் இந்த பணி நடக்க இருக்கிறது.

தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் இதுவரை மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு (98.10 சதவீதம்) பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு (89.83 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ–சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top