ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: வெள்ளையன் பேட்டி

நெல்லை மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

vellaiyan-says-biggest-struggle-against-online-trade_secvpf

வணிகர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. இதனால் வியாபாரிகள், சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

வணிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக அந்நிய பொருட்கள் இந்தியாவிற்குள் தங்கு தடையின்றி உலாவுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வணிகர்கள் சங்க பேரவை எத்தகைய போராட்டத்தையும் சந்திக்க தயாராக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எந்த தேர்தல்களாலும் வணிகர்களுக்கு பயன்இல்லை. நன்மையும் ஏற்படப்போவதில்லை. அந்நிய பொருட்களை வாங்குவதை மக்களும், வணிகர்களும் தவிர்க்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி மக்களும், வணிகர்களும் போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top