தலித் இளைஞர் ராம்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; நாகை திருவள்ளுவன் .

சுவாதி கொலை வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்.திடீரென சிறையில் மரணம் அடைந்தார்.நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்  மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை பதினோரு மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்  புலிகள் கட்சி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. இதில்   மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் கலந்து கொண்டன.

14542738_1325641964147679_1352378022_n

இந்த போராட்ட்த்தின் போது ஸ்வாதி கொலைவழக்கில் இந்துத்துவ சக்திகளுக்கு தொடர்பு இருக்கிறது, இந்த கொலை ஒரு  கவுரவ கொலை,  இதனை மறைக்க அந்த பகுதியில் குடியிருந்த தலித் இளைஞர் ராம்குமார் பலியிடபட்டுள்ளதாகவும் நாகைதிருவள்ளுவன் தெரிவித்தார். இந்த போரட்டத்தில்   எஸ். வி. சேகர், ஒய்.ஜி மகேந்திரன் ஆகிரோரையும் விசாரிக்கவேண்டும் பாதிக்கப்பட்ட ராம்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பத்தி லட்சம் ரூபாய் இழப்பிடு வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

தொடர்ந்து  தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான  செயல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது என்றும். இந்துத்துவ சக்திகளுக்கு சாதகமாக  அரசு செயல் படுகிறது என்றும் கண்டனம்  தெரிவித்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top