இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

indonesiya boat accidentஇந்தோனேசியாவில் புனித வெள்ளியை கொண்டாடும் வகையில், லரண்டுகா நகருக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலியானார்கள்.

30 பேர் மட்டுமே அமரக்கூடிய மீன் பிடி படகில் 60 பேர் சென்றுள்ளனர். திடீரென எழும்பிய 2 மீட்டர் உயரமுள்ள அலையின் காரணமாக பாரம் தாங்காமல் படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி 7 பேர் பலியானதாக காவல்துறை செய்தி தொடர்பாளரான ஒக்டோ ரிவு தெரிவித்தார். மேலும் படுகாயமடைந்த 30 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top