வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாத (அக்டோபர்) இறுதியில் தொடங்க உள்ளது. இப்போது தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. சென்னை வானிலை மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:–

தென் மேற்கு பருவமழை காலம் இன்னும் முடிவடையவில்லை. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

கேளம்பாக்கம் 7 செ.மீ., ஆரணி, காட்டுக்குப்பம் தலா 4 செ.மீ., மாமல்லபுரம், உத்திரமேரூர், மரக்காணம் தலா 2 செ.மீ., செய்யாறு, தாம்பரம் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top