1 ஜி.பி. கட்டணத்தில் 10 ஜி.பி. டேட்டா தரும் வோடபோன்; ஜியோக்கு பதிலடி

ஜியோ வருகையைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக 1 ஜி.பி.க்கு நெட் ரீசார்ஜ் செய்தால் 9 ஜி.பி. இலவசம் என வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள ஜியோ சிம், இந்திய தொலைத் தொடர்புத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மார்க்கெட்டில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத்  தக்க வைத்துக் கொள்ள நாள்தோறும் புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.
1 ஜி.பி. ரீசார்ஜ் செய்தால் 9 ஜி.பி. இலவசம் என வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. 3ஜி, 4ஜி இரண்டுக்கும் இந்த சலுகை பொதுவானது என்று தெரிவித்துள்ள வோடபோன் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரை மட்டுமே இந்த இலவச ஜி.பி.யை பயன்படுத்த முடியும். மேலும், இலவச ஜி.பி. பயன்பாடு புதிய 4ஜி மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top